December 27, 2011
July 22, 2011
May 24, 2011
April 19, 2011
இனியாவது சிரிப்பாயா ?
உன் நினைவில்லாத
நிமிடங்கள் என்னில்
துடிப்பில்லாத இதயமாய்
மௌனிக்கிறது....
என் ஒவ்வொரு நொடியும்
உன் நினைவுகளோடு
உறவாடிய பிறகுதான்
ஓய்வு கொள்ளகிறது.......
இப்படியாக என் எண்ணங்கள்
உன்னை சுற்றி இருக்க
எதற்காய் உனக்கு
இத்தனை வருத்தம்???
April 18, 2011
மீண்டும் ஒரு காதல்
நினைத்தது நினைத்தபடியே
நடக்க நீ மட்டும் எப்படி
என் நினைவுக்குள்
நான் நினைக்காமலே???????
மறந்துவிடு என்னை
தொலைவில் இருக்கிறேன்
உன்னிடம் இருந்து...
தொலைந்து விட
நினைக்கிறேன் உன்
நினைவுகளின் நெருக்கத்தில்
இணைந்து....
தொலைக்க போகிறேன்
என் உறவை
உன்னிடம் இருந்து...
மீண்டும் என்மனம்
மாறுவதற்குள்
மறந்துவிடு என்னை.
யார் குற்றம்
விலகிவிட நினைக்கும்
மனதை மீண்டும்
விளையாட்டாய் அழைக்கிறையே.............
என்மாற்றம் எனக்கே
தெரியாத போது
உன்னை குற்றம்
சொல்லி என்னசெய்வது?????
April 2, 2011
இனி வெகுதூரம் நீ
எனையறியாமல் என்விழி
நனைக்கும் இந்த
கண்ணீருக்கு யாரை நான்
காரணம் காட்டுவேன் ???????
என்னை
நினைத்து பார்க்ககூட
விருப்பம் இல்லாத
உன் வாழ்வில்
என் நினைவுகள்
சிக்கி சின்னபின்னமாவது
ஏன்??????
மன்னித்து விடு
தவறேதும் நான்
செய்துருந்தால்.....
April 1, 2011
சின்னதாய் ஒரு கேள்வி
யாரிடமும் நெருங்கி
பழக விருப்பமில்லை
என்று எண்ணிய
உன் மனதை
எப்படி என்னிடம்
நெருங்க விட்டாய்?????
பறிமாற்றங்கள்
எதையோ தொலைத்து
விட்டு போவது
போன்ற எண்ணம்
அனுதினமும் உனக்கு.....
உன் நிஜங்களை
என் நினைவுகளோடு
தொலைத்து விட்டு
போகிறாய் என்பதை
என்றுதான் உணர்வையோ ???????????????
விடுமுறை
உன் நினைவுகளோடு
உறவாடி உறங்கவைப்பதற்குள்
என்இரவு விடிந்துவிடுகிறது.....
அதனால்தான் விடுமுறை
அளித்துவிட்டேன் சிலகாலம்
என் உறக்கத்திற்கு...
March 31, 2011
ஒருவேளை
என் அருகில் நீ அமர்ந்து
என் இதயம் நீ படித்து
என் உறவை நீ நாடி
எனக்காக வந்திருந்தால்......
உயிராடு சேராத
உறவாக உனைத்தாங்கி
உள்ளம் எல்லாம்
உருகும்படி உனக்காக
சிரித்திருப்பேன்.....
இதயத்தின் ஈரமெல்லாம்
இதய துடிப்போடு
இருப்பதுபோல்
எனை வருடும்
இளங்காற்று என்
முதுமைவரை வாரகூடதா ????
ஒருவேளை
இது நடக்குமென்றால்
அதோடு எனஆயுள்
அமைதிபெற கூடாதா???
March 28, 2011
மனதில் மலர்ந்தவளே
நீளும் இப்பயணம்
நெடுந்தூரம் ஆனால் என்ன ???
என் நினைவெல்லாம்
நீயாகி போனால் என்ன???
விடியாத இரவுக்குள்
விளையாடும் நம்
நினைவுகளை சிந்தாமல்
சிகரத்தில் வைப்போமா???
மலரும் நினைவில்
மறையாத என் இன்பமே!!!
உன் நினைவோடு
இவள உயிர் நிலைத்திருக்கும்
வாழும் காலமெல்லாம்
வசந்தங்களோடு
வாழ்வின் இறுதி வரை......
நெடுந்தூரம் ஆனால் என்ன ???
என் நினைவெல்லாம்
நீயாகி போனால் என்ன???
விடியாத இரவுக்குள்
விளையாடும் நம்
நினைவுகளை சிந்தாமல்
சிகரத்தில் வைப்போமா???
மலரும் நினைவில்
மறையாத என் இன்பமே!!!
உன் நினைவோடு
இவள உயிர் நிலைத்திருக்கும்
வாழும் காலமெல்லாம்
வசந்தங்களோடு
வாழ்வின் இறுதி வரை......
Subscribe to:
Posts (Atom)



