December 13, 2014

நீ மட்டும் இல்லை என்றால்



பொழுது விடிந்த பின்னும்

சற்றே விழிக்க  மறுக்கும்

என் விழிகள்....


உறக்கம் கலைந்த பின்னும்


உன் நினைவு கலையாத

என் ஏக்கங்கள்....


உன் முகம் பார்த்த மகிழ்சியில்

செல்ல சண்டையிட்டு

பின்  உன் கைகோர்க்கும்

என் சந்தோஷங்கள....



இனி என்னவாகுமோ

 நீ மட்டும் இல்லை என்றால் ......

December 1, 2014

கல்லறை வரை

நாம் சந்திக்கும் நாள் 

இன்றே  கடைசி என்கிறாயே...


ஐயோ!!!!!

எப்படி தாங்கி கொள்வேன்

இந்த பிரிவை....


சரி உன் வாழ்வின்

இந்த ஒரு நாளையாவது

எனக்காக தந்து போ

என் கல்லறையில் பொறிக்கட்டும்

நான் வாழ்ந்த நாள்

இன்று மட்டும் என்று ....

ஏன் இந்த மாற்றம்

அன்பே

உன் கைகோர்த்து

நடக்க ஆசை பட்ட போது

தட்டி விட்டு தள்ளி நடந்தாயே....


இன்று    என்ன ஆயிற்று உனக்கு
 
தனியாய் நடக்கும்

என் பயணத்தில் துணையாய்

வர விரும்பிகிறாய்....