என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
February 20, 2012
நெருக்கம்
என்னிடத்தில் நெருங்குவதாக
உனக்கு எண்ணமில்லை....
உன்னைவிட்டு விலகிடவே
எனக்கு விருப்பமில்லை...
எனினும்
நெருக்கத்தில் விருப்பமாய்
நான்....
விருப்பத்தில் விலகியிருக்கும்
நீ.
February 12, 2012
மரணத்தின் பிடியில்
என் இதயமே
உன் பிரிவில்
தவிக்கும் ஒவ்வொரு
நிமிடமும் என்
மரண யாத்திரைக்கு
ஒத்திகை பார்பதாய்
ஒரு உணர்வு
மலரும் கவிதை
என்னை நீ அழவைக்கும்
நேரம் கூட
ஆனந்தப்பட்டேன் என்
கண்ணீரை நீ
இரசிக்கும் போது
எனக்குள் ரகசியமாய்
ஒரு கவிதை
மலர்ந்ததை எண்ணி.
தோழியே
உன் தாகம் தீர்க்கவே
நான் கடலாய் விரிந்தேன்
நீயோ உன் தாகம் தீர்க்க
முகிலை தான் தேடினாய்
அதனால் தான் அன்பேஎன்
அன்பு கடலும் உப்பு கரிக்கிறது.
வலியில் நான்
உன்விரல் பிடித்து
நடக்க முயன்றேன்
நீயோ உன்உயிர்
கொண்டு என்பாதம்
தாங்குகிறாய் வலிக்கிறது
உன் அன்பில்
தவிக்கும் என்காதல்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)