December 25, 2024

விண்ணப்பம்

 உறைந்து  போனதோ  இல்லை

 உதிர்ந்து  போனதோ 

 உயிரில்  கலந்த  உறவு.  

உண்மையினை  அறிய  

உள்ளத்தில்  துணிவில்லை. 

ஏதுவாகிலும்  சரி  என்று  

விலகி நிற்க முடியவில்லை. 

உடைந்து போன உறவை 

உயிர்ப்பிக்க முயலுகிறேன். 

எல்லாம் மாறும் என்று 

துணிகிறேன் 

நம் கடந்த  கால உறவின் 

துணைகொண்டு. 

உள்ளம் திறந்து உறவை 

ஏற்பாயா உயிரே...?

May 30, 2023

ஜனனம்

 உன் 

சிறு சிறு மாற்றங்களை

ஏற்று கொள்ள 

என்மனம் பெரிய 

பயணம் செய்கிறது - அப்போது 

இந்த மாற்றங்கள் 

எல்லாம் கவிதையாகிறது. 

அவ்வப்போது இப்படி

காயப்படுத்தி போ 

நான் கவிஞனாய் 

கரைசேரும் வரை. 

உண்மை

 சில நேரங்களில் 

எதார்த்தமாய் 

சிலரின் வாழ்க்கையில் 

எதிர்பாராத மாற்றங்களை

ஏற்படுத்திவிட்டு 

எளிதாய் மன்னித்து விடு 

என்று சொல்லி 

விலகும் போது உணர்வதில்லை

எதார்த்தத்தை சரி செய்ய 

எத்தனை வருடங்கள் ஆகும் 

என்று....

May 28, 2023

தரிசனம்

 மேகதூரிகையில் மோகம் தீர்த்து வெண்மதியும் மறைந்துவிட்டான்....


 காரிருள் மாய்த்து பேரொளி கொடுக்க கதிரவனும் வந்துவிட்டான்....


 ஏனோ என் விழிகளுக்குள் வாழ்ந்திடும் என்னவளின் தரிசனம் இன்னும் காணாததேனோ.....

April 19, 2022

சூழ்நிலை

 சில சூழ்நிலைகளை 

கடக்க முடியாது 

என எண்ணியே 

எண்ணங்களுக்கு எதிர்மறையாய் 

பல தூரம் கடந்து விடுகிறோம்...

அனுபவத்தின் முன் அனைவரும்

 மௌனமாகி போகிறோம் ...

January 19, 2020

காலச்சுவடுகள்

நீ நடந்து போகும்

பாதை எல்லாம்

என் மனதின்

தேடுதல் பணி

தொடர்கிறது...

 இது தேவதையின்

கால் தடம் என்று

கால சுவற்றில் பதிக்க

வாழ்க்கை

வாழ்க்கை வாய்ப்புகளை

வழங்க மறுத்ததுமில்லை...

கர்ம வினைகள் வாய்ப்புகளை

கலைக்க கருணை கட்டியதுமல்ல..

இது சரி என்று உறவுகள்

சொன்னாலும் ...

 இதுவே  சரி என்று நட்புகள்

சொன்னாலும்...

எதுதான் சரி என்று மனம்

குழப்பத்தில் நின்றாலும்...

 ஒரு நிமிடம் நிதானித்து

வாய்ப்புகளை வசப்படுத்தி

காலத்தை வென்றால்

அதுதான் வாழ்க்கை ...

September 23, 2019

(ஏ)மாற்றம்

சிலரின் ஏமாற்றங்களில்

மாறுகிறோம்

பலரின் மாற்றங்களில்

ஏமாறுகிறோம்

எல்லாம் இயல்பே 

December 25, 2018

நீயும் நானும்

உன்னை எதிர்பார்த்து

என்றும் நான்

என் எதிர்பார்ப்புகளுக்கு

அப்பால்  என்றென்றும் நீ 

November 18, 2018

சில நேரம்

என் கவிதைகளுக்கு

 கூட உன்

கண்களை வருடும்

வரம் கிடைப்பதில்லை