April 19, 2011

அழகான கொள்ளை


என்னடி மனம்

                           உனக்கு?

என்னை பற்றி  

நன்கு  அறிந்துமா 

என்  உயிரை  

திருடி செல்கிறாய்???



இனியாவது சிரிப்பாயா ?


உன் நினைவில்லாத

நிமிடங்கள் என்னில்  

துடிப்பில்லாத இதயமாய்

                         மௌனிக்கிறது....


என் ஒவ்வொரு நொடியும்

உன் நினைவுகளோடு

உறவாடிய பிறகுதான்

ஓய்வு கொள்ளகிறது.......



இப்படியாக என் எண்ணங்கள்

உன்னை சுற்றி இருக்க

எதற்காய் உனக்கு 

இத்தனை  வருத்தம்???                             

April 18, 2011

மீண்டும் ஒரு காதல்


நினைத்தது நினைத்தபடியே

நடக்க நீ மட்டும் எப்படி

என் நினைவுக்குள்

நான் நினைக்காமலே???????





மறந்துவிடு என்னை


தொலைவில் இருக்கிறேன் 

உன்னிடம்    இருந்து...



தொலைந்து        விட

நினைக்கிறேன்     உன்

நினைவுகளின் நெருக்கத்தில் 

                               இணைந்து....


தொலைக்க   போகிறேன் 

என்   உறவை 

உன்னிடம் இருந்து...



மீண்டும்     என்மனம் 

                      மாறுவதற்குள்                                    

மறந்துவிடு  என்னை.

யார் குற்றம்

விலகிவிட நினைக்கும்

மனதை மீண்டும்

விளையாட்டாய்  அழைக்கிறையே.............


என்மாற்றம் எனக்கே

தெரியாத போது

உன்னை குற்றம்

சொல்லி என்னசெய்வது?????           

April 2, 2011

இனி வெகுதூரம் நீ

எனையறியாமல் என்விழி

நனைக்கும் இந்த

கண்ணீருக்கு யாரை நான்  

காரணம் காட்டுவேன் ???????

 
                                                   என்னை

நினைத்து பார்க்ககூட

விருப்பம்  இல்லாத

உன் வாழ்வில்

என் நினைவுகள்

சிக்கி  சின்னபின்னமாவது


                                                 ஏன்??????



மன்னித்து விடு

தவறேதும் நான்

செய்துருந்தால்.....



April 1, 2011

என் காதலே

என்னையும் அறியாமல் 

என்அறிவை சீண்டாதே!!!!!!!!


எனக்கான இதயத்தை 

நீதிருடி செல்லாதே!!!!!!!



சின்னதாய் ஒரு கேள்வி

யாரிடமும்   நெருங்கி   

பழக விருப்பமில்லை 

என்று எண்ணிய 

உன் மனதை 

எப்படி என்னிடம் 

நெருங்க விட்டாய்?????  


பறிமாற்றங்கள்

எதையோ தொலைத்து

விட்டு போவது

போன்ற எண்ணம்

அனுதினமும் உனக்கு.....



உன் நிஜங்களை 

என் நினைவுகளோடு 

தொலைத்து விட்டு 

போகிறாய் என்பதை 

என்றுதான் உணர்வையோ ???????????????





விடுமுறை

உன் நினைவுகளோடு

உறவாடி உறங்கவைப்பதற்குள்

என்இரவு விடிந்துவிடுகிறது.....



அதனால்தான் விடுமுறை

அளித்துவிட்டேன் சிலகாலம்

 என் உறக்கத்திற்கு...