என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
March 1, 2015
காதல் அகராதி
என் வாழ்வின்
அகராதி என்றல்லவா
உன்னை நினைத்திருந்தேன்......
நீயோ அத்தியாமாய்
முடிய நினைப்பதேன்......
உயிர் உரசியவள்
ஆர்ப்பாட்டம் இல்லாத அழகில்
அடம் பிடிக்காத கோபத்தில்
உயிர் உரசும் விழியில்
உள்ளம் தொடும் சிரிப்பில்
சிக்கி கொண்ட காதல் சிதறாமல்
உன்னை சேருமா....?
இல்லை என்னை
சிதைத்து போகுமோ....?
விழியாலே விடைசொல்
என் காதலே.
காதல்தருணங்கள்
உனக்கு யார் பிடிக்கும்
நானா இல்லை அவளா
என்று கேக்கும் சில உறவுகளுக்கு
விடை சொல்ல முடியாமல்
தவிக்கும் அந்த தருணங்களில்
உண்மை சொல்லி
மாட்டி கொள்வதைவிட
உமையாய் இருப்பதே
சிறந்தது...
செல்ல சண்டைகள்
நீ உரிமையோடு சண்டைபோட
வேண்டும் என்றே
உனக்கு பிடித்த சிலரிடம்
நெருங்கி பழகுவதாய்
நடிப்பேன்.....
எங்கிருந்து தான் வருமோ
உனக்கு அத்தனை கோபமும்
உன் அன்பாலே
என்னை எரித்துவிடும்
காதலும்.....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)