September 16, 2018

எல்லைகள்

உனக்கு மதிப்பு

தருகிறேன் என்பதன்

அர்த்தம் என்னை

தாண்டி செல்ல மட்டுமே

எனக்கான எல்லைகளை அல்ல 

அழகான மாற்றங்கள்

உயிர் காதல் குறைந்தது என்று

பெருங்குற்றம் கொண்டாய்

முன்நாளில்...

உயிர் நீ தான் என்று

உணர்த்திய போது

யார் நீ என்றாய்

இந்நாளில்...

எத்தனை மாற்றங்கள் அழகே உன்னிடத்தில்...

காதலாகி கசிந்தது

ஒருவித உன்னதம்
கண்டேன் உன்னிடத்தில் - ஏனோ

உறைந்து போனேன்
உன் உறவிடத்தில்...

காதல் மெல்ல
கரைந்து கசிந்தது
உன் காதோரத்தில்...

என் கவிதை பிறந்தது
உன் கண்ணோரத்தில்...p

September 13, 2018

போராட்டம்

நீ வேண்டாம்

என்ற அறிவின்

போராட்டத்தில்  மனது

கலந்து கொள்ள

மறுப்பதன் மாயம்

புரியவில்லை அன்பே

அது நீ இருக்கும்

இடம் என்பதாலா ?

ஆசைகள்

மனிதனின் மனதில்

கிடைக்காத ஒன்றின்

மேல் வரும் ஆசைகள்

எப்போதும் தனக்கு

சொந்தமான எதிலும்

வருவதில்லை என்றே

உணர்கிறேன் 

பாடல்கள்

விரும்பி கேட்ட

பாடல்களை எல்லாம்

என்னிடத்தில் இருந்து

விலக்கி வைக்கிறேன்...

உன் நினைவை

எல்லாம் அவை

மீண்டும் என்

நினைவில் நிறுத்துவதால்...

தனிமை

தனிமை கொடுமையானது

என்று வெறுத்தவள்

நான் தான் - ஏனோ

உன்னோடு இருந்த

பின்பே உணர்கிறேன்

தனிமை இத்தனை

சுகமானது என்று 

வாழ்க்கை

வாழ்ந்து பார்க்க 

கொஞ்சம் மாறுபட்ட

கண்ணோட்டம் மட்டும்

இருந்துவிட்டால்

வாழ்க்கை அழகானது தான்

உன்னால்

எழுத்துகளில்

 மட்டும் அல்ல ஏனோ
 
 எண்ணங்களும் பிழை பட்டு

கொண்டு இருக்கிறது...

September 2, 2018

என்னை நான் தேடிய போது

மனநிலையில் சிறிது
மாறுதல் கண்டேன்

பிறப்பின் பயன்
மறக்க கண்டேன்

பிரிவுகளில் மனதை
தொலைக்க கண்டேன்

செய்வது எல்லாம் சரிஎன்று
நினைக்க கண்டேன்

தேவைகள் இல்லாத
தேடல்கள் கண்டேன்

தேடியவற்றை தேவைக்குப்பின்
தொலைக்க கண்டேன்

இயல்பாய் முகம்கொண்டு
பேச கண்டேன்

இதயத்தை இறுக்கமாய்
வைக்க கண்டேன்

செல்லுக்கும் செயலுக்கும்
வேற்றுமை கண்டேன்

சொல்லியதெல்லாம் மற்றவரை
செய்விக்க கண்டேன்

மனிதன் என்னும்ஓர்
பிறவி கொண்டேன்

மனதிற்குள் மிருகமாய்
வாழ கண்டேன் 

September 1, 2018

மீண்டும்

மீண்டும் மீண்டும்

வருவதால் பெருமை

மட்டும் கொள்ளாதே

ஒரு முறை நிறுத்திவிட்டால்

மீண்டும் சரி

செய்து வர மனமொன்றும்

இருவழி சாலையல்ல 

தவறில்லை

வா என்று கூறும்

 முன்னே உன் வாழ்வில்

வந்ததால் போ என்றதும்

போய்விடுவேன் என்று

நினைத்து விட்டாய் போலும்

நினைத்ததில்

தவறில்லை

நிரூபிக்க நான் முயலவில்லை 

காலம்

ஆறிவிடாத காயம்

என்று ஒன்றும்

இல்லையடி...

ஆறுதல் கூட அவசியமும்

இல்லையடி ....

காலம் என்ற

மருந்து சரிசெய்யாத

காயங்களும் இல்லையடி ...

கடந்து வருவேன்

இனி

உயிர் வாழ முடியாது

 என்று நினைத்த

நாட்களையும் கடந்து

வந்துவிட்டேன்...


உன்னோடு வாழ முடியாது

என்பதில் பெருங்கவலை

ஒன்றும் இல்லையென்றே

எண்ணுகிறேன்