September 12, 2013

உன் பிரிவால்


நம்

காதல் நிமிடங்கள்

கண்ணீரில் கரைவதோ....

நீயிருக்கும் இதயம்

நிறம்மாறி போவதோ ???


September 5, 2013

மறக்கமுடியாதவள் நீ

நீ

என்னை நினைப்பதை

நிறுத்திவிட்டாய்.....



நானும்

உன்னை போல 

தான் உன்னை

மறக்க முயற்சிப்பதை

நிறுத்திவிட்டேன்...

தேடலில் நான்

நீயும் என்னை

தேடுகிறாய் என்பதை

உன் தேவைகள்

உறுதிபடுத்துகிறது.......



நீ என் தேவையல்ல

நீயே என் தேடல்

என்பதை என்று தான்

உணர்வாய??????

இப்படியும் ஒரு காதல்


என் கவிதைக்கும்

கற்பனைக்கும் மட்டுமின்றி

என் காதலுக்கும்

நீ தகுதி இல்லாதவள்

என்று தெரிந்தும்

கூட மனம்

உன்னையே காதலிக்கிறது ..

August 31, 2013

வேற்றுமை



உனக்கும் எனக்கும்

ஓரே ஒரு

வேற்றுமை தான் 

நீ என்னை நினைக்கிறாய்

நான்

 உன்னை மட்டுமே நினைக்கிறேன். 

August 25, 2013

தெரியவில்லை

என்ன செய்தாலும்

வெறுக்காமல் பின்

தொடருகிறாய்.....


உன்னை வெறுப்பதாய்

நடிக்கும் என் நாடகம்

உனக்கு எப்படி தான்

தெரிந்து விடுகிறதோ


 

August 9, 2013

நினைவே




நான் இருக்கும் வரை

 உன்னை நேசிப்பேன்.......

மனம் வெறுக்கும் வரை

அல்ல......



  

June 12, 2013

தேவைகள்


நான் உயிர்வாழ

சில நிமிடம்....



அதில் உன்னோடு

ஒரு நிமிடம்..... 

March 23, 2013

பரிமாற்றம்




உயர்ந்தது என்ன????

எடுத்து செல்ல உன்

நினைவை தவிர....



உள்ளது என்ன????

கொடுத்து செல்ல என்

அன்பை தவிர.....

March 3, 2013

என்னவள் நீ

என்று மலரும்  

உன் கரம் பிடித்து

என்னை கரைசேர்த்த

அந்த  காதல் நன்னாள்..............


அழகே

நம் எண்ணங்கள் வேறு என்றாய்

இருந்தும் என்னவள் நீ என்றேன்

அன்று மலர்ந்த காதல்

இன்றும் உதிராமல்  நம்முள்.....




இதமாய் நான்

கனிவாய் பார்த்தாய் 

                             ------அன்று 

கரைந்து கலந்தவள் 

                              இன்றும்

கரைசேர மனம்

இன்றி உன் நட்பு

கடலில் சிக்கி

தவிக்கிறேன் தோழி

இதமாய்  நம்

நினைவிகளை சுமந்து