என் இனியவளே
எல்லாம் உனக்காக - ஆனால் நீ மட்டும் எனக்காக
November 22, 2014
ஏற்க மறுக்கும் இதயம்
நம்மை நேசிப்பவரை
நாம் புறக்கணிப்பதும்
நாம் நேசிப்பவரால்
புறக்கணிக்க படுவதும்
இயல்பு என தெரிந்தும்
இதயம் ஏற்க
மறப்தென்ன தோழி
நீயும் நானும்
நீயோ
உன் தனிமையில்
மட்டும் என்னை தேடுகிறாய்....
நானோ
நீ தள்ளி நிற்கும்
நிமிடங்களே எனக்கு
தனிமை என்று புலம்புகிறேன்....
எதிர்மறையான நினைவில்
உன் நினைவுகளில் இருந்து
தப்பிக்க நினைப்பதாய்
எண்ணி ஏமாறும்
என் நிமிடங்கள்....
நேர்மறையாய் இல்லாவிட்டாலும்
எதிர்மறையாய்
என் சிந்தனைக்குள் புகுந்து
சிதைக்காதே காதலே...
நகரும் நிமிடங்கள்
மாற்றங்கள் மட்டும் தான்
நானும் மனிதனாய்
வாழ்கிறேன் என்பதை
உணர்த்துகிறது.....
இல்லை என்றால்
நீ தந்த
கண்ணீரும் காயங்களே
என்னை கொன்றிருக்கும்....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)