September 5, 2015

ஆணவம் இல்லாத அழகு


தலைகணம் இல்லாத

உன் அழகில்

தலைகுனிந்து போகிறது

என் ஆணவம்


May 1, 2015

நீ



என் கவிதையின் பொய்மட்டும் அல்ல

என் காதலின் நிஜம் கூட நீ தான்...


என் எண்ணங்களில் மட்டும் அல்ல

என் எல்லாமே நீ தான்...

காத்திருப்பு


 
நான் காத்திருப்பது

உனக்காக மட்டும் அல்ல...


 உன்னோடு வாழ போகும்

நம் வாழ்கைக்காகவும் தான்.....

காதல் வாசம்

வறண்டு போன என் வாழ்வில்

உன் வசந்தங்களை நீ வாரி

இறைக்கும்  காலம் என்றடி

சகியே...

உன்
காதல் வாசம் வீசும்

முன்பே கனவில் கல்லறை

வாசம் வீசுதடி

கனவில் சொல்ல மறுத்தாலும்

கல்லறையிலாவது சொல்லிவிடு

உன் காதல் பார்வைகள்

எனக்காக மட்டும் என்று...

உன் பாதையில் என் பயணம்

தனிமை கொஞ்சம் தாக்கினாலும் 

உன் நினைவுகள் ஒவ்வொரு

நொடியும் நிழலாய் என்னை

தொடருகிறது...

ஏனோ

என்னை நினைத்து பார்க்க கூட

யோசிக்காத உனக்காய்

நான் நினைவிழப்பது தவறென

தெரிந்தும் தொடர்கிறேன்

உன் பாதையில் என் பயணத்தை

 

காதல் பார்வைகள்

உன்னழகில் காதல்

வயப்பட்டவர்கள் பலர் ....


உன்னை காதலித்து

ஏமார்ந்தவர்கள் சிலர்....

முடிவாய் நீ கைகோர்த்து

நடக்க ஒருவர்...

இப்படி தொடரும்

உன்   பயணத்தில்

மீண்டும் உன் காதல்

பார்வைகளால் என்னை

காயப்படுத்துவதன் காரணம்

என்னவோ கண்ணே

பேரழகு

பெண்களையும் வெக்கபட

வைக்கும் பார்வை...

ஆண்களையும் அடிமையாக்கும் சிரிப்பு.....


உலகை மறந்து

உறைந்து போகவைக்கும் தோற்றம்....


இவள பெண்ணல்ல

எனக்காக இறைவன்

படைத்தனுப்பிய தேவதை

என மெய்சிலிர்க்க வைக்கும்

பேரழகு அல்லவா நீ



அடையாளமாய் நீ

என் வாழ்வில் 

மறக்க  முடியாத

நினைவுகளை நீ

தரவில்லை என்றாலும்


அழிக்க முடியாத

அடையாளமாய் மாறிவிட்டாய்

பெண்ணே.....


March 1, 2015

காதல் அகராதி



என் வாழ்வின்

அகராதி  என்றல்லவா

உன்னை நினைத்திருந்தேன்......


 நீயோ அத்தியாமாய்

முடிய நினைப்பதேன்......

உயிர் உரசியவள்

ஆர்ப்பாட்டம் இல்லாத  அழகில்

அடம் பிடிக்காத கோபத்தில்

உயிர் உரசும் விழியில்

உள்ளம் தொடும் சிரிப்பில்

சிக்கி கொண்ட  காதல் சிதறாமல்

உன்னை சேருமா....?

இல்லை  என்னை

சிதைத்து போகுமோ....?


விழியாலே விடைசொல்

என் காதலே.




காதல்தருணங்கள்

உனக்கு  யார் பிடிக்கும்

நானா இல்லை அவளா

என்று கேக்கும் சில உறவுகளுக்கு

விடை சொல்ல முடியாமல்

தவிக்கும் அந்த தருணங்களில்

உண்மை சொல்லி

மாட்டி கொள்வதைவிட

உமையாய் இருப்பதே

சிறந்தது...

செல்ல சண்டைகள்

நீ உரிமையோடு சண்டைபோட

வேண்டும் என்றே

உனக்கு பிடித்த  சிலரிடம்

நெருங்கி  பழகுவதாய்

நடிப்பேன்.....


எங்கிருந்து தான் வருமோ
 
உனக்கு  அத்தனை கோபமும்
 
உன் அன்பாலே

என்னை எரித்துவிடும்

காதலும்.....


February 9, 2015

காதல் தொல்லை


நீ நடந்து போகும்

சத்தம் கேட்டு திரும்ப கூடாது

என்று தவிக்கும்

என் இதயத்தை

எப்படியோ தெரிந்துகொண்டு

உன்னை திரும்பி பார்க்க வைத்து

விடுகிறாயே தினமும்...

என்ன செய்வது உன்னை

அழகான ஆர்ப்பாட்டம்


 அழகால் என்னை கொல்ல

ஆர்ப்பாட்டம் செய்கிறது

உன் கண்கள்...


உயிர் பிழைக்க விருப்பமின்றி 

உன் பின்னே நகர்கிறது

என் கனவுகள்....

தள்ளாடும் இதயம்

அழகே

உன்னை போல கண்களின்

வழியே காதலை சொல்ல

எனக்கு தெரியவில்லை....

அதனால் தான்

என் கவிதையினை துதுவிடுகிறேன் ....

உன்னை பார்த்ததும் தள்ளாடும்

என்
இதயம் போல

அதுவும் தடுமாறது

என்ற தைரியத்தில்....

ஏய் பெண்ணே

உன் ஒட்டு மொத்த காதலையும்

ஒன்று சேர்த்து உன் விழி அசைவில்

என்மீது வீசுகிறாய் 

பெண்ணே...


சீராய் துடிக்கும்

என் இதயம் கூட

சில நிமிடம் துடிக்க

மறந்து சிலிர்க்கிறது...  

இனி என்னவாகுமோ என்நிலை....

January 17, 2015

உள்மனதில் ஒரு ஆசை

போதும் என்று சொல்ல ஒருநாளும்

கிடைத்ததில்லை எனக்கு

உன்னோடு இருக்கையில்...



இன்று எண்ணுகிறேன்


என்றேனும்

என் நினைவுகள்


உன் மனதில் உதயமானால்

போதும் என்ற வெற்றிடம்

உள்மனதில்.....

காதல் நிமிடங்கள்


மரணத்தின் பிடியில்

மாட்டிக்கொண்டு மறுபடியும்


உயிர்வழ்வேனோ

இல்லை சாவேனோ

என்ற உயிர்பயம் உள்நெஞ்சில்



உன் விழிகள்

என் விழிவருடும்

நிமிடங்கள்

வெளிவேசம்

தனித்திருக்க முடிவு செய்துவிட்டால்

எதற்கிந்த வெளிவேசம்...


காலம் சுமந்து செல்லட்டும்...



நம் உறவுகளை இங்கே

உதறி விட்ட பின்பும்


நினைவுகளையாவது

கல்லறை வரை



 

பொய்யான நிஜம்

எது நிஜம் எது பொய்

நம் அன்பு பொய்

வெறுப்பு நிஜமா?




நம் உறவு பொய்

பிரிவு நிஜமா?


நம் இனிமை பொய்

தனிமை நிஜமா?


விட்டுவிடு பயனில்லை 

இனி எது பேசியும்


 

தேவையில்லை

வெறுப்புகள்  வந்த பின்பு

வீண்பேச்சு தேவையில்லை



நிஜங்கள் தொலைந்த பின்பு

நினைவுகளுக்கு இடமில்லை


சந்தேகங்கள் சேர்ந்த பின்பு

சந்தோஷங்களுக்கு  வழியில்லை


காயங்கள் பட்ட பின்பு

கண்ணீர்சிந்தி பயனில்லை


அன்பானவர்கள் ஏமாற்றிய பின்பு

ஆறுதல்ஏதும் தேவையில்லை