March 31, 2011

ஒருவேளை



என் அருகில் நீ அமர்ந்து

என் இதயம் நீ படித்து

என் உறவை நீ நாடி

எனக்காக வந்திருந்தால்......



உயிராடு சேராத

உறவாக உனைத்தாங்கி

உள்ளம் எல்லாம்

உருகும்படி உனக்காக
சிரித்திருப்பேன்.....




இதயத்தின் ஈரமெல்லாம்

இதய துடிப்போடு

இருப்பதுபோல்

  

எனை வருடும்

இளங்காற்று என்

முதுமைவரை வாரகூடதா  ????


                                              ஒருவேளை 

இது  நடக்குமென்றால்

அதோடு எனஆயுள்

அமைதிபெற கூடாதா???


March 28, 2011

மனதில் மலர்ந்தவளே

நீளும்  இப்பயணம்

நெடுந்தூரம் ஆனால் என்ன ???

என் நினைவெல்லாம்

நீயாகி போனால் என்ன???



விடியாத இரவுக்குள்

விளையாடும் நம்

நினைவுகளை சிந்தாமல்

சிகரத்தில் வைப்போமா???


மலரும் நினைவில்

மறையாத என் இன்பமே!!!



உன் நினைவோடு

இவள உயிர் நிலைத்திருக்கும்

வாழும் காலமெல்லாம்

வசந்தங்களோடு

வாழ்வின் இறுதி வரை......