March 1, 2012

சுமையான சுகம்

அழகாய் அறிவாய்                  அருகே வந்தாய்

கனிவாய் கலையாய் கரங்கள் பிடித்தாய்

உயிராய் உணர்வாய் உள்ளம் படித்தாய்

இதமாய் இயல்பாய் இதயம் தந்தாய்

எளிதாய் என்னை உன்னுள் மறைத்தாய்

எதனால் எதனால்  என்னுள் நுழைந்தாய்
 எதற்காய் இன்று தள்ளி சென்றாய்

சரியோ பிழையோ உன்னிலை அறியேன்
எனினும்

நீ மகிழ்வாய் இருந்தால் மரணத்தை

கூட மடியில் தாலாட்டுவேன்

உன் உறவின் உற்சாகத்தில்.