கைகோர்த்து நடக்க
எதுகை மோனை
இதயத்தை துளைக்க
என்உயிரில் பாயும்
ஒருதுளி எடுத்து
விருப்பத்து உடனே
விரல்வழி செலுத்தி
விரல்களின் பிடியில்
விடைபடும் சொற்களை
அழகிய தமிழில்
கவியாய் வடித்து - எஞ்சி
ஏங்கிய சொற்களை
தாங்கியே அழைத்து
எனக்காய் வந்த
உனக்காய் நிறைத்தேன் - எனினும்
பிரிவுகள் பிழைபட
பிரளையம் பிளவுற
கனவுகள் தடைபடும்
காட்சிகள் கண்டு
என்
என்
சறுக்கிய திமிறை
அடக்கியே வைத்து
சறுக்கிய வயதை
இருக்கியே பிடித்து
என்
உயிரை உணர்வை
உனக்காய் சமர்பிக்கிறேன்
உயிரே
உனக்காய் தலைசாய்கிறேன்

No comments:
Post a Comment